Loading...
- சிவப்பரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
- சிவப்பரிசியில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
சிவப்பு அரிசி – 5 டேபிள்ஸ்பூன்,
பால் – ஒரு லிட்டர்,
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்,
பாதாம் – 10 (துருவிக் கொள்ளவும்),
சர்க்கரை – தேவையான அளவு.
Loading...
செய்முறை:
சிவப்பு அரிசியை மிக்ஸியில் ரவை போல் உடைத்துக் கொள்ளவும்.
பாலுடன் உடைத்த அரிசியை சேர்த்துக் கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்து வரும்போது, அடுப்பை ‘சிம்’மில் வைத்து 10 நிமிடம் வேகவிடவும்.
பின்னர் சர்க்கரை சேர்க்கவும். எல்லாம் நன்கு சேர்ந்து வரும்போது ஏலக்காய்த்தூள், துருவிய பாதாம் சேர்த்து இறக்கவும்.
இதை சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறலாம்.
Loading...