Loading...
திருகோணமலை கடற்கரையில் நேற்று இரவு முதல் தார் போன்ற விசித்திரமான பொருள் ஒன்று குவிந்து வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த மர்மபொருள் சிறு துண்டுகளாகவும், கொத்தாகவும் வந்துள்ளதாகவும் அது ஒட்டும் தன்மை கொண்டதாகவும் மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Loading...
தற்போது துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள கப்பல் ஒன்றில் இருந்தே இந்த பொருட்கள் வெளிவருவதாகவும் இந்த கப்பல் வந்த பின்னரே மர்மபொருள் கரையொதுங்குவதாகவும் மீனவர்கள் கூறுகின்றனர்.
இந்த தார் போன்ற பொருள் வலைகள் மற்றும் மீன்பிடி சாதனங்களில் சிக்கிக் கொள்வதால் சிறு குழந்தைகள் கூட கடற்கரைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் மேலும் தெரிவித்தனர்.
Loading...