- அன்திம் பன்ஹால் தங்கப்பதக்கத்துக்கான சுற்றில் ஜப்பான் வீராங்கனை அகார்கி புஜிநமியை சந்திக்கிறார்.
- இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக் 1-5 என்ற புள்ளி கணக்கில் ஜப்பானின் நான்ஜோவிடம் வீழ்ந்தார்.
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவின் அரை இறுதியில் இந்திய வீராங்கனை அன்திம் பன்ஹால் 8-1 என்ற புள்ளி கணக்கில் உஸ்பெகிஸ்தானின் அக்டென்ஜி கெனிம்ஜாவாவை எளிதில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
அரியானாவை சேர்ந்த 18 வயதான அன்திம் பன்ஹால் கடந்த ஆண்டு நடந்த 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்திம் பன்ஹால் தங்கப்பதக்கத்துக்கான சுற்றில் ஜப்பான் வீராங்கனை அகார்கி புஜிநமியை சந்திக்கிறார்.
57 கிலோ எடைப்பிரிவின் அரை இறுதியில் உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக் 1-5 என்ற புள்ளி கணக்கில் ஜப்பானின் நான்ஜோவிடம் வீழ்ந்தார். தோல்வி அடைந்த அன்ஷூ மாலிக் அடுத்து வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் பங்கேற்கிறார்.