Loading...
பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி தொடர்ந்த அவதூறு வழக்கில், ராகுல்காந்தி எதிர்வரும் 25ஆம் திகதி ஆஜராகுமாறு பாட்னா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2019ஆம் ஆண்டில் பிரதமரின் பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
இந்நிலையில், பாட்னாவில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான நீதிமன்றத்தில், சுஷில் குமார் மோடியும் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
Loading...
அதன்படி, ராகுல் இன்று ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், சூரத் வழக்கு தொடர்பான பணிகள் காரணமாக வேறொரு நாளில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்குமாறு, ராகுல் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து, அவர் எதிர்வரும் 25ஆம் திகதி நேரில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
Loading...