இயக்குனர் யுவராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கே.கே’.
இப்படத்தின் முதல் பாடலை இம்மாத இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
ரெட்டச்சுழி, சாட்டை திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த யுவராஜா ‘கெளுத்தி’ என்ற திரைப்படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் திரைக்கு வர தயாராகி வருகிறது. இதைத்தொடர்ந்து குழந்தைகளின் வாழ்வியலை கதைக்களமாக கொண்ட திரைப்படத்தை இயக்க உள்ளார்.
கலர் காத்தாடி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ‘கே.கே’ என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. இந்த திரைப்படத்தில் பேபி.சஞ்சனா மற்றும் மிதுன் ஈஸ்வர் குழந்தை நட்சத்திரங்களாய் களமிறங்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து இப்படத்தின் முதல் பாடலை இம்மாத இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இப்பாடலை இயக்குனர் யுவராஜா எழுத, ஜித்தின் கே ரோஷன் இசையமைப்பில் விஜய் டிவி புகழ் ரிஹானா மற்றும் சர்வேஷ் பாடியுள்ளனர். மேலும், ‘கே.கே’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் பாடலை ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தில் தெருக்கூத்து கலைஞராக நடித்து செவகாட்டு சீமையிலே என்ற பாடலை பாடிய பின்னணி பாடகர் குரு பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.