Loading...
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்குவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் இடம்பெற்றமையினை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் உறுதிப்படுத்தியுள்ளார்.
Loading...
இந்த கலந்துரையாடலில் தன்னோடு நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமும் கலந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து உரிய பதில் கிடைக்காத காரணத்தினால் இதில் இருந்து விலகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...