சியோமி நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடல்கள் வெளியீட்டு விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளன.
மூன்று வித நிறங்களில் உருவாகி இருக்கும் புதிய டேப்லெட் மாடலில் கீபோர்டு டாக் மற்றும் ஸ்டைலஸ் சப்போர்ட் வழங்கப்படுகிறது.
சியோமி நிறுவனம் தனது சியோமி பேட் 6 மற்றும் சியோமி பேட் 6 ப்ரோ மாடல்களின் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. சியோமி 13 அல்ட்ரா மாடலுடன் புதிய டேப்லெட் மாடல்கள் சீன சந்தையில் ஏப்ரல் 18 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று சியோமி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. டேப்லெட் மாடல்கள் வெளியீட்டை உணர்த்தும் டீசர்களுடன் இவை மூன்று நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் புதிய பேட் 6 சீரிஸ் டேப்லெட்களில் கீபோர்டு டாக் மற்றும் ஸ்டைலஸ் சப்போர்ட் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் 2.8K 144Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட ஸ்கிரீன், ஹார்டுவேர்-லெவல் லோ புளூ லைட் ஐ ப்ரோடெக்ஷன், டூயல் ஐ ப்ரோடெக்ஷன் சான்று கொண்டிருக்கிறது. புதிய சியோமி பேட் 6 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், சியோமி பேட் 6 ப்ரோ மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது.
சியோமி பேட் 6 ப்ரோ மாடலில் 8600 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், புதிதாக டீப் ஸ்லீப் மோட் உள்ளது. இதன் ஸ்டாண்ட்பை நேரம் 47.9 நாட்கள் என்று சியோமி தெரிவித்துள்ளது. இதுதவிர டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி இந்த டேப்லெட் மாடல் மெட்டல் பாடி, யுஎஸ்பி 3.0, கைரேகை சென்சார், 50MP பிரைமரி கேமரா, அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சியோமி 13 அல்ட்ரா மாடலில் 6.7 இன்ச் சாம்சங் LTPO E6 AMOLED QHD+ 120Hz டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி, 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு கேமரா, 50MP டெலிபோட்டோ மற்றும் பெரிஸ்கோப் லென்ஸ், 32MP செல்ஃபி கேமரா, 4900 எம்ஏஹெச் பேட்டரி, 90 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.