ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் சீரிஸ் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.
இந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் புதிய ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் இந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த ஆண்டு ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என நான்கு வித மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இதில் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் இந்த ஆண்டு அல்ட்ரா மாடலாக அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் வரை அது பற்றி எவ்வித தகவலையும் வழங்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை ஆப்பிள் கடுமையாக பின்பற்றி வருகிறது. எனினும், புதிய ஐபோன் மாடல்கள் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. கடந்த சில வாரங்களாக புதிய ஐபோன் 15 சீரிஸ் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், இந்த மாடல்களின் புதிய விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
அதன்படி ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் அதாவது ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் ஆப்பிள் நிறுவனம் இரண்டு பட்டன் டிசைனையே வழங்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. சாலிட் ஸ்டேட் யுனிஃபைடு வால்யும் பட்டன்கள் தயாராக காலதாமதம் ஆவதால், இரண்டு பட்டன் கொண்ட டிசைனை வழங்க முடிவு செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
தற்போது இருக்கும் மாடல்களில் ஏற்கனவே இரண்டு பட்டன் டிசைன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மியூட் ஸ்விட்ச்-ஐ மாற்றிவிட்டு புதிதாக மியூட் பட்டன் வழங்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடலில் உள்ள ஆக்ஷன் பட்டன் போன்றே புதிய மியூட் பட்டன் கஸ்டமைஸ் செய்யப்பட்டு இருக்கும்.