வெலிகம பிரதேசத்தில் வீதியில் சென்று கொண்டிருந்த இளைஞனை அடித்துக் கொன்ற குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
10 வயதுடைய இரண்டு சிறார்கள் உட்பட ஆறு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 6 பேரும் 16, 21, 23 மற்றும் 32 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர் எம்.எச்.சமுரங்க என்ற இளைஞன் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இளைஞன் நண்பர்கள் குழுவுடன் மதுபான விருந்தின் போது வீதியில் பயணித்த பெண் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் வெகுதூரம் சென்றதையடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பெண் கொடுத்த தகவலின் பேரில் அவரது இரண்டு மகன்கள் உட்பட சிலர் வீதியில் வைத்து இளைஞனை கொடூரமாக தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் அவரது இரண்டு மகன்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலும் இது தொடர்பான செய்திகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்