- இந்திய வீராங்கனை ருதுஜா போசெல் 7-5, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் யோன்வூ குவை வீழ்த்தினார்.
- 2 ஆட்டங்களில் வெற்றி பெற்ற இந்திய அணி சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும்.
பில்லி ஜீன் கோப்பைக்கான பெண்கள் அணிகள் டென்னிசில் ஆசிய- ஓசியானா குரூப்-1 சுற்று ஆட்டங்கள் உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கென்டில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி நேற்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென்கொரியாவை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தென்கொரியாவிடம் போராடி வீழ்ந்தது.
ஒற்றையர் பிரிவின் முதல் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை வைதேகி சவுத்ரி 6-2, 4-6, 4-6 என்ற செட் கணக்கில் டாபின் கிம்மிடம் வீழ்ந்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ருதுஜா போசெல் 7-5, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் யோன்வூ குவை வீழ்த்தினார்.
இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ருதுஜா போசெல்-அங்கிதா ரெய்னா இணை 4-6, 6-2, 3-6 என்ற செட் கணக்கில் ஜி ஹீ சோய்-டாபின் கிம் ஜோடியிடம் தோல்வியை தழுவியது. 2 ஆட்டங்களில் வெற்றி பெற்ற இந்திய அணி சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும்.