நடிகை பாவனா ஷூட்டிங் முடிந்து காரில் திரும்பியபோது, திட்டமிட்டு, அவரின் முன்னாள் கார் ட்ரைவர் மற்றும் அவரின் மூன்று நண்பர்களால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டு , போராடி தப்பித்துள்ளார்.
தப்பித்தவர் பக்கத்தில் இருந்த நடிகர், இயக்குனர் லால் வீட்டி ற்கு சென்று இருக்கிறார். என்ன நடந்தது என்பதை சொல்லி கதறி அழுதிருக்கிறார்.
நடிகர் லால் பாவனாவுக்கு நன்கு அறிமுகமானவர். பாவனா அப்பாவாக ஹனிபீ 2 படத்தில் நடிப்பதோடு, முன்பு தீபாவளி படத்திலும் அப்பாவாக நடித்துள்ளவர்.
எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுவிட்டு, போலீசாருக்கும் தெரியப்படுத்திவிட்டு, பாவனாவின் வருங்கால கணவரை வர சொல்லி இருக்கிறார்.
அவர் வந்தவுடன், அவரிடம் எடுத்து சொல்லி, பக்குவமாக பேச சொல்லி இருக்கிறார். அவரும், பாவனாவை தேறுதல் செய்து, பயப்படாதே என்று போலீசார் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்து பொறுமை யாக சூழ்நிலையை கையாண்டு இருக்கிறார்.அதற்குபின் தான் பாவனா கொஞ்சம் அமைதியாக ஆனாராம்.
அதுமட்டும் இல்லாமல், நீதிமன்ற விசாரணை யிலும், நடந்ததை கூச்சமில்லாமல் கூறி, குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தரணும் என்று அவருக்கு நம்பிக்கை தந்து துணிச்சலை வரவழைத்தாராம் பாவனா வருங்கால கணவர்.