இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ G13 குறைந்த விலையில் கிடைக்கிறது.
ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் விற்பனை செய்கிறது.
உலகில் முழுவதிலும் ஸ்மார்ட்போன்கள் பெரும்பாலானோருக்கும் அத்தியாவசியமான சாதனமாக மாறிவிட்டது. எனினும், ஸ்மார்ட்போன் சந்தையில் ஏராளமான மாடல்கள் மிக குறுகிய காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கிடைக்கின்றன. அடிக்கடி புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படுவதால், குறிப்பிட்ட விலை பிரிவில் சிறந்த ஸ்மார்ட்போனை தேர்வு செய்வது சவாலான காரியமாக இருக்கிறது.
எனினும் ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி, போக்கோ, லாவா, மோட்டோ என பல்வேறு நிறுவனங்கள் மிகக் குறைந்த விலையிலும் புதிய மாடல்களை அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றன. போட்டி அதிகரித்து வருவதை அடுத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது மாடல்களில் சிறந்த அம்சம் இருப்பதை உறுதிப்படுத்த பெருமளவு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
சக்திவாய்ந்த பிராசஸர்களில் இருந்து, போதுமான ஸ்டோரேஜ், அதிக ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளேக்கள், சிறந்த கேமராக்கள் என அசத்தல் அம்சங்களுடன் சந்தையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில், ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் புதிய மாடல் வாங்க விரும்புவோர் தேர்வு செய்ய சிறந்த மாடல்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
மோட்டோ G13
6.5 இன்ச் டிஸ்ப்ளே HD+ ரெசல்யூஷன், மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர், 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 50MP பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள், 8MP செல்ஃபி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்டவை இந்த மோட்டோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் ஆகும். இந்திய சந்தையில் மோட்டோ G13 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது.
லாவா யுவா 2 ப்ரோ
இந்தியாவில் ரூ. 7 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கும் இந்த லாவா ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் HD+ நாட்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ G37 பிராசஸர், 13MP பிரைமரி கேமராவுடன் இரு விஜிஏ கேமராக்கள், 5MP செல்ஃபி கேமரா, ஸ்கிரீன் ஃபிளாஷ், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் அடாப்டர் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.
மோட்டோ E13
ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்று. ரூ. 6 ஆயிரத்து 999 எனும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் மோட்டோ E13 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே, ஆக்டா கோர் யுனிசாக் டி606 பிராசஸர், மாலி G57 MP1 GPU, அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 13MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வசதி போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.
ரியல்மி C55
இந்திய சந்தையில் ரூ. 10 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி C55 ஸ்மார்ட்போன் வங்கி சலுகைகளை சேர்த்தால் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.72 இன்ச் LCD டிஸ்ப்ள, Full HD+ ரெசல்யூஷன், 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ G88 பிராசஸர், 64MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.