முட்டை விலை குறித்து முடிவை எடுப்பதற்காக செயற்குழு மற்றும் சிறிய மற்றும் பெரிய அளவிலான முட்டை உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு கூடி தீர்மானிக்கவுள்ளனர்.
விலையை தொடர்ந்தும் பேணுவது அல்லது குறைப்பது குறித்து இக் கலந்துரையாடலில் முடிவு செய்யப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்
முட்டையின் விலை குறைய வேண்டும் என 75 சதவீத உற்பத்தியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்பிரகாரம் இந்த விலை திருத்தம் செய்யப்பட்டால், நாளை திங்கட்கிழமை காலை முதல் அமலுக்கு என்றும் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்
எதிர்வரும் நாட்களில் முட்டைக்கான தேவையும் குறையும் என்பதனால் எனவே நியாயமான விலையில் முட்டைகளை விற்பனை செய்ய வேண்டும் எனவும் அச்சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.