- சோயா பீன்ஸில் அதிகளவு புரதங்கள், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது.
- முளைக்கட்டிய சோயா பீன்ஸில் தோசையை செய்தால் அதிகளவு வைட்டமின் E கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:
சோயா பீன்ஸ் – 2 கப்
கேரட் – 1
முள்ளங்கி – 1
வெங்காயம் – 1
தக்காளி – 1
அரிசி மாவு – 4 ஸ்பூன்
இஞ்சி – 1 இன்ச்
பச்சை மிளகாய் – 4
சீரகம் – ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
கேரட், முள்ளங்கியை துருவிக்கொள்ளவும்.
சோயா பீன்ஸை வெது வெதுப்பான தண்ணீரில் சுமார் 2 மணி நேரங்கள் ஊற வைக்கவும்.
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
மிக்சி ஜாரில் ஊறிய சோயா பீன்ஸை போட்டு அதனுடன் தோல் நீக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் அரிசி மாவு, துருவிய கேரட், முள்ளங்கி, சீரகம், வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
அடுப்பில் தோசைக் கல்லை வைத்து கல் சூடானதும் சிறிது எண்ணெய் தடவி, மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
இப்போது சுவையான ஆரோக்கியமான தோசை ரெடி!