Loading...
அறுகம்பே – உல்லா கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் அடித்து செல்லப்பட்ட ஐந்து பேரை ஒருவர் காப்பாற்றியுள்ளார்.
குறித்த பகுதியில் கடமையாற்றிய பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அறுகம்பே முகாமின் உயிர்காப்பாளரே இவ்வாறு விரைந்து செயற்பட்டு ஐந்து பேரின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
நேற்று (15) மாலை இந்த விபத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...
அனர்த்தத்திற்கு முகங்கொடுத்தவர்களின் விபரம்
இதன்போது நான்கு யுவதிகளும், ஒரு இளைஞனும் நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்தவர்கள் 18, 19, 25 மற்றும் 29 வயதுடையவர்கள் எனவும், கோமாரி 01 பகுதியில் வசிப்பவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
Loading...