துபாயில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 இந்தியர்கள் உட்பட 16 பேர் உடல் கருகி பலியாகியுள்ளதுடன் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆண்கள் மற்றும் கேரளாவைச் சேர்ந்த தம்பதி உள்ளடங்களாக 4 இந்தியர்கள் பலியாகியுள்ளனர்.
தீ விபத்திற்கு காரணம்
ஐந்து மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடத்தின் நான்காவது தளத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்திற்கு, மின் கசிவே காரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பலியான இந்தியர்களில், தமிழகத்தை சேர்ந்த அப்துல் காதர், குடு சாலியாகுண்ட் , கேரள மலப்புரம் வெங்கரையை சேர்ந்த ரிஜேஷ் கலங்காடன் , அவரது மனைவி ஜெஷி கண்டமங்கலத் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கேரளாவினை சேர்ந்த தம்பதியினரான மலப்புரத்தைச் சேர்ந்த வெங்கரா ரிஜேஷ் (வயது 38) மற்றும் அவரது மனைவி ஜெஷி (32) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.