Loading...
5000 ரூபா பெறுமதியான 27 போலி நாணய தாள்களுடன் ஒருவர் மோதர பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் நேற்று (15.04.2023) மோதர, பகுதியில் வைத்து சோதனையிட்ட போதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...
விசாரணை
சந்தேக நபர் இரத்தினபுரியை வசிப்பிடமாகக் கொண்டவர் என்பதுடன் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) போலி நாணயத்தாள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பண்டிகைக் காலத்தில் போலி நாணயங்களை சந்தையில் அறிமுகப்படுத்த முயற்சிக்கும் மோசடியாளர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...