சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் விவேகம் படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இப்படத்தில் அஜித் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும் முக்கிய கதாபாத்திரத்தில் அக்ஷரா ஹாசனும் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதைதொடர்ந்து இப்படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில் கல்லூரி விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குனர் சிவா, இப்படத்தின் செகண்ட் லுக் விரைவில் வெளிவரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நமக்கு கிடைத்த தகவலின்படி இந்த இரண்டாவது கெட்டப்பில் அஜித் கருநிற தலைமுடியுடன் யங் லுக்கில் இருப்பாராம். இது படத்தில் காஜல் அகர்வால் உடனான அவரது காதல் போர்ஷனாம்.