Loading...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும், சீன பாதுகாப்பு அமைச்சர் லி ஷங்ஃபுவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
ரஷ்யாவில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டதாக வெளிநாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளுக்கு எல்லையே இல்லை என சீன பாதுகாப்பு அமைச்சர் ரஷ்ய ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
Loading...
இராணுவம் மற்றும் தொழில்நுட்ப தகவல் பரிமாற்றத்திற்கு ஒத்துழைக்க தனது நாடு மிகவும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் லி ஷங்ஃபு மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். இதற்கு முன்னர் சீன ஜனாதிபதி ரஷ்யாவுக்கு விஜயம் செய்திருந்தார்.
Loading...