Loading...
2024ஆம் ஆண்டு இலங்கையில் தேர்தல் வருடமாக அமையும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
இதற்கமைய, 2024 இல் உள்ளாட்சி சபைத் தேர்தல், ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல் மற்றும் மாகாணசபைத் தேர்தல் என்பன இடம்பெறக்கூடும் என சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Loading...
முதலில் உள்ளாட்சிசபைத் தேர்தலும், அதன்பின்னர் ஜனாதிபதி தேர்தலும் நடைபெறும் எனவும், அதன்பின்னரே ஏனைய தேர்தல்கள் குறித்து முடிவெடுக்கப்படலாம் எனவும் தெரியவருகின்றது.
அதேவேளை, உள்ளாட்சிசபைத் தேர்தல் இவ்வருடத்துக்குள் நடைபெறும் எனக் கூறப்பட்டாலும் அதற்கான சாத்தியம் குறைவு எனவும் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Loading...