தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கி, தற்போது நடைபெற்று வரும் அரசியல் சூழல் வரை கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இவரின் கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் தமிழக அரசியல் சூழல் குறித்து விமர்சித்ததற்காக கமல் நற்பணி இயக்கத்தை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்த கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, இனி மக்கள் நீதி நாடு காக்கும். நான் கீச்சிடாமல் அடிநாதத்துடன் அடக்கி வாசிக்கவே நினைத்தேன். ஆனால் எம் இயக்கப் பொறுப்பாளரின் கைது பேச வைக்கிறது. தமிழ்நாட்டை கட்டுப் போராட்டத்தில் எமதியக்கத்தின் சுதாகரும் சிலரும் நேற்று கைது. இது எமது பெருமையைக் கூட்டவும் அரசியல் வன்மத்தைக் காட்டவும் செய்கிறது
நமதியக்கத்தார் சற்றதிகமாக கண்ணியம் காக்கும் நேரமிது. அளந்து பேசவும் தொடர்ந்து பேசவும். அரசுகள் மாறிமாறிவரினும் நம் கட்சியற்ற கொள்கைமாறாது. எக்கட்சி அரசேற்றாலும் நம் பணி பொதுநலம் காப்பதே. இக்கூலியில்லா வேலையை நம் ஆயுள் உள்ளவரை செய்வோம். அவர் பலமுறை வருவர், போவர். நிரந்தரம் நம்நாடு,
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.