மத்ரிகிரி – பிசோபுர பிரதான வீதியின் சந்தி பகுதியில் லொறியும் முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மித்ரிகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேசிய பாடசாலையொன்றில் 8ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நவநகர பிரதேசத்தில் பயிற்சி வகுப்பிற்கு செல்வதற்காக குறித்த மாணவியும் அவரது நண்பர்கள் ஐவரும் முச்சக்கர வண்டியில் பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் காயமடைந்த ஏனைய மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்திற்கான காரணம்
இவர்கள் கொஹொம்படமன பிரதேசத்தில் இருந்து நவநகர நோக்கி பயணித்த போது, பிசோபுர பிரதேசத்தில் இருந்து மெதிரிகிரிய பகுதிக்கு சென்று கொண்டிருந்த லொறியுடன் முச்சக்கரவண்டி மோதியதில் முச்சக்கரவண்டி குன்றொன்றின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மாணவி பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் பல நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக வெலிசர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.