இடைநிலை வகுப்புகளுக்கான பாடசாலை மாணவர் சேர்க்கை தொடர்பான புதிய சுற்றறிக்கையை கல்வி அமைச்சு வெளியிட உள்ளது. தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றறிக்கை ஏப்ரல் 20 ஆம் திகதியின் பின்னர் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலை தவணை விடுமுறை
புதிய சுற்றறிக்கைக்கு மேலதிகமாக இந்த வாரம் பாடசாலை தவணை விடுமுறை திருத்தத்துடன் புதிய கால அட்டவணையையும் கல்வி அமைச்சு வெளியிடும் என்றும் நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தேசிய பாடசாலைகளில் இடைநிலை தரங்களுக்கு தரம் 2 முதல் 4 மற்றும் 7 முதல் 10 வரையில் புதிதாக மாணவர்களைச் சேர்ப்பது குறித்து எதிர்வரும் 21ஆம் திகதிக்குப் பின்னர் தேசிய பாடசாலைகளுக்கு அறிவிக்கப்படுமென கல்வி அமைச்சு கடந்த வாரம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.