முதலில் விளையாடிய நியூசிலாந்து 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன் குவித்தது.
கேப்டன் டாம் லாதம் பொறுப்புடன் விளையாடி அரை சதமடித்தார். அவர் 49 பந்தில் 64 ரன் எடுத்தார்.
:பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது டி20 போட்டி லாகூரில் நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய நியூசிலாந்து 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது.
கேப்டன் டாம் லாதம் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 49 பந்தில் 64 ரன்னும், டேரில் மிட்செல் 33 ரன்னும் எடுத்தனர். தொடர்ந்து, விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இப்திகார் அகமது, பஹீம் அஷ்ரப் ஜோடி 8வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்தது. இப்திகார் அகமது அதிரடியாக ஆடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.
அவர் 24 பந்துகளில் 6 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 60 ரன்கள் குவித்து கடைசி ஓவரில் அவுட்டானார்.
இதனால் நியூசிலாந்து 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து சார்பில் நீஷம் 4 விக்கெட்டும், மில்னே, ரவீந்திரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் உள்ளது.