பிஎஸ்என்எல் நிறுவனம் வாய்ஸ் காலிங் சேவையை வழங்கும் புதிய சலுகையை அறிவித்தது. புதிய பிஎஸ்என்எல் சலுகை மொத்தத்தில் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிக பலன்களை வழங்கும் சலுகைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.
பல்வேறு விலை பிரிவுகளில் கிடைக்கும் பிரீபெயிட் சலுகைகள் வெவ்வேறு பலன்களை பயனர்களுக்கு வழங்குகிறது.
இந்த வரிசையில் பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகை பயனர்களுக்கு வாய்ஸ் கால் சேவையை மட்டும் 90 நாட்களுக்கு வழங்குகிறது. புதிய பிஎஸ்என்எல் சலுகை விலை ரூ. 439 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய பிஎஸ்என்எல் ரூ. 439 சலுகை அன்லிமிடெட் வாய்ஸ் கால், தேசிய ரோமிங், 300 எஸ்எம்எஸ் போன்ற பலன்களை வழங்குகிறது.
முன்னதாக கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது பிஎஸ்என்எல் ரூ. 439 சலுகை அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த சலுகையின் மூலம் பயனர்கள் மாதத்திற்கு ரூ. 146 கட்டணத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் சேவையை பெறலாம். இதன் மூலம் தினமும் ரூ. 4.80 செலவில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒருவேளை நீண்ட கால வேலிடிட்டி வேண்டும் என்று எதிர்பார்ப்போருக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 1,999 விலையில் சலுகையை வழங்கி வருகிறது.
இதில் தினமும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் பலன்கள், 600 ஜிபி அதிவேக டேட்டா உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி ஒரு வருடம் ஆகும்.