Loading...
மத்திய வங்கியில் 50 இலட்சம் ரூபாய் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களைக் கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெகுணாவெல கோட்டை பொலிஸாருக்கு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
Loading...
நீதிமன்றத்திற்கு இந்த விவகாரம் தொடர்பில் கோட்டை பொலிஸார் சமர்ப்பித்த அறிக்கையை கவனத்தில் எடுத்துக் கொண்ட நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மத்திய வங்கியின் உயர் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த பணம் திருடப்பட்டமை தொடர்பில் ஏற்கனவே திணைக்களத்தின் பல அதிகாரிகளிடம் வாக்குமூலங்களை பதிவு செய்து வருவதாகவும் கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
Loading...