Loading...
எதிர்வரும் முதலாம் திகதி முதல் கட்டுப்பாட்டு விலையின் கீழ் முட்டைகளை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் இதன் விலை மேலும் குறையலாம் எனவும், இதற்கமைய டிசம்பர் மாதத்திற்குள் முட்டையை 25 முதல் 30 ரூபாய் வரையில் கொள்வனவு செய்ய முடியும் எனவும் அதன் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.
Loading...
இதேவேளை, பண்டிகைக் காலத்தில் அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த 700 விற்பனையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
Loading...