இந்த நாட்களில் குழந்தைகளிடையே சில நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் சிறு குழந்தைகளை வெளியே செல்ல முடியாத வகையில் கார்களில் தனியாக விட வேண்டாம் எனவும் பெற்றோர்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஆசிய பசுபிக் சமூக சுகாதார அமைப்பின் பொதுச்செயலாளர் பேராசிரியர் இந்திக கருணாதிலக தெரிவிக்கையில்,
குழந்தைகளிடையே ஒருவித மயக்கம், அல்லது தாகம், வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தால், அதனை உடனடியாக நிவர்த்தி செய்வது அவசியம்.
இந்த கடுமையான வெயிலில் வெளியில் செல்பவர்கள் தொப்பி மற்றும் குடைகள் போன்றவற்றைப் பயன்படுத்துவது முக்கியம்.
மேலும் அணியும் ஆடைகள் வெளிர் நிறங்களைப் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். ஏனெனில் அங்கு வெப்பம் உறிஞ்சப்படுவதால் இந்த நாட்களில் இரண்டு லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தினால் பொருத்தமானதாக இருக்கும்.
இதேவேளை, பாடசாலை விடுமுறை முடிந்துள்ள காலப்பகுதியில் சிறுவர்களுக்கு வயிற்றுப்போக்கினால் ஏற்படும் நீரிழப்பை தவிர்ப்பதில் பெற்றோர்கள் அவதானமாக இருக்க வேண்டுமென சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா கருத்துத் தெரிவிக்கையில்,
இதேவேளை, பாடசாலை விடுமுறை முடிவதற்குள் வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இந்த நாட்களில் குழந்தை காய்ச்சலுடன் வாந்தி எடுத்தால் மற்றும் வயிற்றுப்போக்கு இருந்தால், நீரிழப்புக்கு அதிக வாய்ப்பு உள்ளது.
எனவே குழந்தைகளுக்கு இயற்கையான திரவ உணவுகளை அதிகம் குடிக்கக் கொடுங்கள். குறிப்பாக பழச்சாறு,இளநீர் , நாரணம், மாதுளை, இனிப்பு பலாம்பழம் போன்றவை நீரிழப்பை தடுக்கும் என்பதால் அவற்றினை கொடுப்பது சிறந்தது என்றும் கூறியுள்ளார்.