மலையகத்தில் கடந்த சில மாதங்களாக வறட்சியான காலநிலை நிலவி வருகிறது.
இந்த வறட்சியான காலநிலையினை தொடர்ந்து காசல் நீர்த்தேக்கத்தில் என்றுமில்லாத அளவுக்கு நீர் தாழியிறங்கியுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ச்சியாக காணப்பட்ட வறட்சியான காலநிலையினையடுத்து வெப்பம் அதிகமாக காணப்படுவதனால் கால்நடை வளர்ப்பாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
மலையகத்தில் வறட்சி
இந்நிலையில் தங்களது கால் நடைகளுக்கு தேவையான புல்லை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கால் நடைகளுக்கு போதியளவு உணவு வழங்க முடியாததன் காரணமாக பால் உற்பத்தி குறைந்துள்ளதாகவும் இதனால் தங்களது வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேநேரம் வறட்சியான காலநிலையினை தொடர்ந்து காசல்ரி நீர்த்தேக்கத்தில் என்றுமில்லாதவாறு நீர் தாழியிறங்கியுள்ளதாகவும் இதனால் நீர் முழ்கி கிடந்த கட்டடங்களின் இடிபாடுகள்,வீதிகள் மற்றும் குன்றுகள் ஆகியன முழுமையாக தோற்றம்பெற்றுள்ளது.
கால் நடைகளுக்கு போதியளவு உணவு இல்லை
தற்போது தாழிறங்கியிருக்கும் நீர் நிரம்புவதற்கு குறைந்தது ஒன்றரை மாதமேனும் தொடர்ச்சியாக மழை பெய்ய வேண்டும் என தெரிவிக்கின்றனர்.
தற்போது நிலவி வரும் வறட்சியினால் பல பிரதேசங்களில் குடிநீர் தட்டுப்பாடு காணப்படுவதுடன் நீரின்றி பலர் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.மலையகத்தில் பல பகுதிகளில் காலை வேலை மிகவும் வெப்ப காலநிலை காணப்படுவதாகவும் மாலை வேளையில் ஒரு சில பிரதேசங்களுக்கு சிறிதளவு மழை பெய்து வருவதாகவும் மேலும் சிலர் தெரிவித்துள்ளனர்.