சிறீலங்காவில் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு நல்லிணக்கம் அவசியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு எதிர்க்கட்சி அலுவலகத்தில் இரா.சம்பந்தனைச் சந்தித்து பேச்சு நடாத்தியிருந்தது. இப்பேச்சின்போதே அமெரிக்க நாடாளுமன்றக் குழுவிடம் சம்பந்தன் இதனை வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பில், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களான பீற்றர் ரோஸ்கம், டேவிட் பிரைஸ், ஜெரி கொனோலி, அட்ரியன் ஸ்மித் ஆகியோருடன், சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்பும் கலந்து கொண்டார்.
அதேவேளை, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று, சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர், கரு ஜெயசூரிய, மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை நடத்தியது.