உருளைக்கிழங்கை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். காரணம் அதன் சுவை. அதன் சுவை மாத்திரமல்ல அதில் பல்வேறு சத்துக்களும் உள்ளடங்கியுள்ளன.
உருளைக்கிழங்கில் 20 சதவீதம் கார்போஹைட்ரேட், 77 சதவீதம் நீர்ச்சத்து, 2 சதவீதம் புரதச்சத்தும் அடங்கியுள்ளது.
உருளைக்கிழங்கை விதவிதமான வகையில் சமைத்து சாப்பிடலாம். தற்போது உருளைக்கிழங்கில் பொப்கோர்ன் எவ்வாறு செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 250 கிராம்
முட்டை – 1
ப்ரெட் தூள் – தேவையான அளவு
சோள மா – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் உருளைக்கிழங்கு தோல் சீவி, சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
பின்னர் வெட்டிய உருளைக்கிழங்கை அரை மணித்தியாலம் தண்ணீரில் ஊறவிட வேண்டும்.அடுத்ததாக, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும் அதில் ஊறவைத்த உருளைக்கிழங்கைப் போட்டு 5 நிமிடம் மூடி வேக வைக்கவும்.
வேகவைத்த உருளைக்கிழங்கை வெளியில் எடுத்து குளிர்ந்த நீரில் போட்டு வைக்கவும். ஒரு ப்ளாஸ்டிக் பையில் சோளமாவை போட்டு, உருளைக்கிழங்கை தண்ணீர் இல்லாமல் வடித்து அதில் போட்டு நன்றாக குலுக்கவும்.
இவ்வாறு செய்வதால் சோள மா முழுவதும் உருளைக்கிழங்கில் ஒட்டியிருக்கும். பின்னர் ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.
ப்ரெட் தூளை ஒரு தட்டில் பரப்பி வைக்கவும். பின்னர் உருளைக்கிழங்கு துண்டுகளை ப்ரெட் தூளில் பிரட்டி வைக்கவேண்டும்.
இறுதியாக அடுப்பில் கடாய் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, உருளைக்கிழங்கை அதில் போட்டு பொரித்தெடுக்கவும்.