‘சாமி’ முதல் பாகத்தில் நடித்த திரிஷாவையே இப்படத்திலும் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யலாமா? என படக்குழுவினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். கடைசியில், திரிஷாவையே இப்படத்திலும் நடிக்க வைக்கலாம் என முடிவு செய்து தற்போது, அவரையே ஒப்பந்தமும் செய்துள்ளனர்.
ஹரி ஏற்கெனவே ‘சிங்கம்’ படத்தின் மூன்று பாகங்களிலும் அனுஷ்கா உள்ளிட்ட பல நடிகர்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்தார். அதே பாணியை இந்த படத்தின் பாகங்களிலும் பின்பற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அனேகமாக, ‘சாமி’ முதல் பாகத்தில் நடித்த நிறைய நடிகர்கள் இந்த பாகத்திலும் தொடர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விக்ரம்-திரிஷா ஏற்கெனவே ‘சாமி’, ‘பீமா’ ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள். அதேபோல், திரிஷா ஹரியின் இயக்கத்தில் ‘சாமி’, ‘ஆறு’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது விக்ரம் – ஹரி இருவருடனும் மூன்றாவது முறையாக திரிஷா இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.