கொல்கத்தா அணி 20 ஓவரில் வெறும் 127 ரன்களே எடுத்தது. 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.
தலைநகர் டெல்லியில் இன்று இரவு நடைபெற்ற 28-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் நிதானமாக ஆடினார். அவர் 43 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர். யாரும் நிலைத்து நிற்கவில்லை.
கடைசி கட்டத்தில் ஆண்ட்ரு ரசல் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இறுதியில், கொல்கத்தா அணி 20 ஓவரில் வெறும் 127 ரன்களே எடுத்தது.
இதையடுத்து, 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. இதில், அதிகபட்சமாக டேவிட் வார்னர் 57 ரன்களும், மனிஷ் பாண்டே 21 ரன்களும், ப்ரித்வி ஷா 13 ரன்களும், பிலிப் சால்ட் 5 ரன்களும், மிட்செல் மார்ஷ் 2 ரன்களும் எடுத்தனர்.
அசார் படேல் 17 ரன்கள் மற்றும் லலித் யாதவ் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில், 19.2 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் ஐபிஎல் டி20 தொடரில் தனது முதல் வெற்றியை பதித்தது.