இந்திய அணி டைபிரேக்கர் முடிவில் 5-4 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. அரைஇறுதியில் 6-2 என்ற கணக்கில் நெதர்லாந்தையும் எளிதில் தோற்கடித்த இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
உலகக் கோப்பை வில்வித்தை (நிலை 1) போட்டி துருக்கியில் உள்ள அண்டால்யா நகரில் நடந்து வருகிறது. இதில் ரிகர்வ் அணிகள் பிரிவில் அதானு தாஸ், தீரஜ், தருண்தீப் ராய் ஆகியோர் அடங்கிய இந்திய ஆண்கள் அணி நேரடியாக 2-வது சுற்றில் களம் கண்டது.
இதில் இந்திய அணி டைபிரேக்கர் முடிவில் 5-4 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து கால்இறுதியில் 6-2 என்ற கணக்கில் சீன தைபேயையும், அரைஇறுதியில் 6-2 என்ற கணக்கில் நெதர்லாந்தையும் எளிதில் தோற்கடித்த இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ரிகர்வ் அணிகள் பிரிவில் இந்திய அணி கடந்த 9 ஆண்டுகளில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் தங்கப்பதக்கத்திற்கான இறுதிசுற்றில் இந்திய அணி, சீனாவை சந்திக்கிறது. இதே போல் காம்பவுண்ட் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா வென்னம் அரைஇறுதிக்கு முன்னேறி இருக்கிறார்.