சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ரெட்மி K50i மாடலில் டிமென்சிட்டி 8100 பிராசஸர், 6.6 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது.
சியோமி நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. சியோமி 12 ப்ரோ மற்றும் ரெட்மி K50i ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றன.
இந்திய சந்தையில் ரூ. 62 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் தற்போது அமேசான் வலைதளத்தில் ரூ. 49 ஆயிரத்து 999 விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இத்துடன் வங்கி கார்டு கொண்டு பரிவர்த்தனை செய்யும் போது கூடுதலாக ரூ. 4 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
முன்னதாக பிப்ரவரி மாத வாக்கில் சியோமி 13 ப்ரோ வெளியீட்டைத் தொடர்ந்து சியோமி 12 ப்ரோ விலை ரூ. 10 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு ரூ. 52 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. சியோமி 12 ப்ரோ போன்றே ரெட்மி K50i ஸ்மார்ட்போனும் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
மீடியாடெக் நிறுவனத்தின் டிமென்சிட்டி 8100 பிராசஸர், 6.6 இன்ச் டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் ரெட்மி K50i ஸ்மார்ட்போன் ரூ. 25 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தற்போது இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் ரூ. 22 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 3 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 19 ஆயிரத்து 499 என்று மாறிவிடும்.