விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிப்பவர் நிஹாரிக்கா கோனிடேலா. இவர் சிரஞ்சீவியின் உறவு பெண். இன்னும் தலைப்பிடப்படாத இந்த படத்தை 7 சிஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனமும், அம்மே நாராயணா நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
தெலுங்கில் நடித்த முதல் படம் மூலம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் நாயகி நிஹாரிக்கா. இவர் தற்போது, அறிமுக இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடித்து வரும் புதிய படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படம், காதல் கலந்த கற்பனை கதை. அடர்ந்த காட்டு பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.
இது பற்றி கூறிய இயக்குனர் ஆறுமுககுமார்..
“நடிப்பாற்றலால் கதாபாத்திரத்துக்கு உயிர் தர கூடிய ஒரு கதாநாயகியை நாங்கள் தேடி கொண்டு இருந்தோம். அப்போது நிஹாரிக்காவின் அசத்தலான நடிப்பை பற்றி கேள்விப்பட்டு அவரை எங்கள் படத்தின் கதாநாயகியாக முடிவு செய்தோம்” என்றார்.