எத்தனை ரத்தினங்கள் இருந்தாலும் வைரத்துக்கு என்றுமே தனி மவுசுதான். வைரத்தை ‘ரத்தினங்களின் ராஜா’ என்று கூறுவதுண்டு.
வைரங்கள் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய குகைகளில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இனி வைரம் பற்றி சுவாரஸ்ய தகவல்களை இங்கு காணலாம்.
‘அடமாஸ்’ என்ற கிரேக்க வார்த்தையிலிருந்தே வைரம் என்ற வார்த்தை தோன்றியது. இதன் அர்த்தமானது, அழியாதது அல்லது வெல்ல முடியாதது.
அமெரிக்காவே உலகின் மிகப் பெரும் வைர சந்தையாகக் காணப்படுகிறது.
பூமிக்கு அடியில் சுமார் 100 மைல்களுக்கு கீழே வைரங்கள் உருவாகின்றன.
வைரம் அணிந்தவர்கள் போரில் தைரியமாகவும் வலிமையாகவும் இருப்பதால் பண்டைய காலத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது.
‘கல்லினன்’ என்று கூறப்படும் 3,106 காரட் எடையுள்ள உலகின் மிகப்பெரிய தோராயமான வைரமானது, 1905ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
நீலம், பச்சை, ஒரேஞ்ச் என்பவையே அரிதான இயற்கை வைர வண்ணங்களாகும்.
ஒரு வைரத்தால் மாத்திரமே இன்னொரு வைரத்தை கீற முடியும்.
ஒரு தனிமத்தால் செய்யப்பட்ட ஒரே ரத்தினம் வைரம் மாத்திரமே.
இந்தியாவிலேயே 18ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் பெரும்பாலான வைரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஆஸ்திரியாவின் ஆர்ச்டியூக் மாக்சிமிலியனிடமிருந்து பர்கண்டி மேரிக்கு முதல் வைர நிச்சயதார்த்த மோதிரம் வழங்கப்பட்டது.