கொழும்பு துறைமுக நகரத்தில் சர்வதேச பாடசாலை, சர்வதேச தரத்திலான வைத்தியசாலை, நிதி நிலையம் மற்றும் சர்வதேச தரத்திலான சுற்றுலா ஹோட்டல் என்பன நிர்மாணிக்கப்படுவதற்கு முதற்கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, சுமார் 1000 மாணவர்கள் கல்வி கற்கக்கூடிய சர்வதேச பாடசாலை நிர்மாணிக்கப்படவுள்ள நிலையில் அது சுமார் 40 மில்லியன் டொலர் திட்டமாகும்.
மேலும் 1,000 படுக்கைகள் கொண்ட சர்வதேச மருத்துவமனை 105 மில்லியன் டொலர் திட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
சர்வதேச நிதி மையம் 500 மில்லியன் டொலர் திட்டமாக முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அதன் முதலீடு மற்றும் கட்டுமானம் அடுத்த மூன்று மாதங்களில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரு புகழ்பெற்ற வணிக நிறுவனமான LOLC நிறுவனத்தின் முதலீடான சர்வதேச தரத்திலான ஹோட்டலின் ஆரம்ப நிர்மாணப் பணிகளுக்காக சுமார் 14 மில்லியன் டொலர்கள் செலவிடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே மெரினா ஹோட்டல் என்று பெயரிப்பட்டுள்ள 5 நட்சத்திர ஹோட்டல் அதுவாகும். அதற்கமைய, மொத்த முதலீட்டு மதிப்பு சுமார் 65.9 மில்லியன் டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.