அட்சய திருதியை அன்று நகை தான் வாங்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நீங்கள் எந்த பொருளை வாங்கினாலும், அது இரட்டிப்பாகும் என்பது தான் அதன் அர்த்தம் ஆகும். இன்று தங்க நகை வாங்க முடியாதவர்களால், வாங்க வேண்டிய முக்கியமான இந்த 2 பொருட்களை பற்றி தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். மகாலட்சுமியின் அம்சமாக இருக்கும் இந்த 2 பொருளை அட்சய திருதியை நாளில் வாங்கினால் தன, தானியம் மட்டுமல்லாமல் ஆடை, ஆபரண சேர்க்கையும் பெருகும் என்கிற ஐதீகம் உண்டு. எனவே நகை வாங்க முடியவில்லையே என்கிற கவலையை விட்டுவிட்டு மறக்காமல் இந்த இரண்டு பொருளை மட்டும் காசு கொடுத்து நாளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
அட்சய திருதியை அன்று நகை கடைகளில் கூட்டம் அலை மோதுவதை பார்த்தாலே நமக்கு ஆச்சரியமாக இருக்கும். தங்கம் விற்கும் விலைக்கு நகை கடைகளில் எப்படித் தான் இவர்கள் சென்று நகையை வாங்குகின்றனர்? என்று வெளியிலிருந்து அங்கலாய்ப்பவர்களும் உண்டு. இப்படியானவர்களுக்கு தங்க நகை வாங்க வேண்டும் என்கிற ஏக்கத்தை துடைக்கும் இந்த இரண்டு பொருள் ரொம்பவே சக்தி நிறைந்தது.
மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய கல் உப்பு மற்றும் குண்டு மஞ்சள் அந்த 2 பொருட்கள் ஆகும். முந்தைய காலங்களில் குண்டு மஞ்சளை அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். இன்று கடைகளில் விற்கும் பவுடரை பயன்படுத்தி கொள்கின்றோம். ஆனால் இந்த குண்டு மஞ்சளுக்கு நிறையவே விசேஷமான சக்திகள் உண்டு. வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு ஒரு குண்டு மஞ்சள் கொடுத்து வழி அனுப்பினால் உங்களுடைய குடும்பம் சுபிட்சம் பெறும் என்கிற சாஸ்திர குறிப்புகள் உண்டு.
பணம் சம்பாதிப்பதில் இருக்கும் தடைகளை அகற்றி, நம்மை மேலும் மேலும் முன்னேற வைக்கக்கூடிய சக்தி குண்டு மஞ்சளுக்கு உண்டு. எனவே வீட்டில் எப்பொழுதும் குண்டு மஞ்சள் பூஜை அறையில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது முக்கியம். அட்சய திருதியை அன்று புதிதாக கடைக்கு சென்று உங்கள் கைகளால் கல் உப்பு வாங்கி வந்து உப்பு ஜாடியில் நிரப்பி வைக்க வேண்டும். மீதமிருக்கும் உப்பை ஒரு செம்பு அல்லது பித்தளை அல்லது கண்ணாடி பாத்திரத்தில் நிரப்பி பூஜை அறையில் கொண்டு போய் வையுங்கள்.
அதே போல குண்டு மஞ்சளையும் உங்களால், உங்கள் தேவைக்கு ஏற்ப காசு கொடுத்து கடையில் அன்றைய தினம் சென்று புதிதாக வாங்கி வந்து இதே போல வேறொரு பாத்திரத்தில் நிரப்பி பூஜை அறையில் வைக்க வேண்டும். கல் உப்பு மற்றும் குண்டு மஞ்சள் நிரம்பிய இந்த இரண்டு பாத்திரங்களையும் பூஜை அறையில் வைத்த பின்பு மகாலக்ஷ்மியை மனதார வழிபட வேண்டும். இவ்வாறு செய்ய தனம், தான்யம் மட்டுமல்லாமல் ஆடை, ஆபரணம், சொத்து சேர்க்கையும் ஏற்படும்.
பொதுவாகவே அட்சய திருதியை அன்று நகை தான் வாங்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நீங்கள் எந்த பொருளை வாங்கினாலும், அது இரட்டிப்பாகும் என்பது தான் அதன் அர்த்தம் ஆகும். எனவே உங்களுக்கு எந்த பொருட்கள் பல்கிப் பெருக வேண்டுமோ, அந்த பொருட்களை கடைக்கு சென்று நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். இதெல்லாம் ஒரு சாஸ்திரமே அன்றி இதற்காக ஏக்கம் கொள்ளவோ, வருத்தப்படவும் ஏதுமில்லை.