கேலக்ஸி S20 FE மாடலை ரூ. 29 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும். பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்யும் போது கூடுதலாக ரூ. 25 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
பிரீமியம் அல்லது மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் வாங்குவது பற்றிய திட்டம், அதற்கான பட்ஜெட் விஷயத்தில் பெரும் கேள்விக்குறியை ஏற்படுத்தும். அந்த வகையில், பிரீமியம் மாடல்களின் மீது அதிக சலுகைகள் அல்லது தள்ளுபடி அறிவிக்கப்படும் போது அதுபற்றிய தகவல் வேகமாக பரவுவது இயல்பான காரியம் தான்.
அந்த வரிசையில், அமேசான் வலைதளத்தில் சாம்சங் கேலக்ஸி S20 FE மாடலுக்கு அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி ரூ. 74 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி S20 FE மாடலை அமேசான் வலைதளத்தில் தற்போது ரூ. 4 ஆயிரத்து 999 விலையிலேயே வாங்கிட முடியும். அமேசான் தளத்தில் சாம்சங் கேலக்ஸி S20 FE மாடலின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி விலை ரூ. 74 ஆயிரத்து 999 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனினும், இந்த வேரியண்டிற்கு குறுகிய கால சலுகையாக 60 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இதன் காரணமாக கேலக்ஸி S20 FE விலையில் ரூ. 45 ஆயிரம் வரை சேமிக்க முடியும். இதற்காக பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்யவோ அல்லது குறிப்பிட்ட வங்கி கிரெடிட் கார்டையோ பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
குறுகிய கால தள்ளுபடி சேர்த்து கேலக்ஸி S20 FE மாடலை ரூ. 29 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும். விலை குறைப்பு தவிர பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்யும் போது கூடுதலாக ரூ. 25 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனினும், இந்த சலுகையை பெற ஸ்மார்ட்போன் சீராக இயங்கும் நிலையில் இருப்பது அவசியம் ஆகும். அனைத்து ஸ்மார்ட்போனிற்கும் ஒரே மாதிரியான மதிப்பு வழங்கப்படாது. ஒவ்வொரு ஸ்மார்ட்போனின் மறுமதிப்பீடு பொருத்து அதற்கான விலை வேறுப்படும்.
எக்சேஞ்ச் சலுகையில் முழு தள்ளுபடியை பெறும் பட்சத்தில் சாம்சங் கேலக்ஸி S20 FE மாடலை ரூ. 4 ஆயிரத்து 999 விலையிலே வாங்கிட முடியும்.
இதன் மூலம் அதிகபட்சம் ரூ. 70 ஆயிரம் சேமிக்கலாம். அம்சங்களை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி S20 FE 6.5 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 12MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 8MP டெலிபோட்டோ கேமரா, 32MP செல்ஃபி கேமரா மற்றும் 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.