Loading...
கடந்த ஓராண்டு காலப் பகுதியில் 700 தாதியர் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2022ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் இவ்வாறு தாதியர் வெளிநாடு சென்றுள்ளனர்.
சுகாதார திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
Loading...
தாதியர் சேவைக்கு வெற்றிடம்
இவ்வாறு வெளிநாடு சென்ற தாதியரில் 500க்கும் மேற்பட்டவர்கள் சுகாதார அமைச்சின் அனுமதியுடன் உயர்கல்வியைத் தொடரும் நோக்கில் ஐந்தாண்டு கால விடுமுறையில் வெளிநாடு சென்றுள்ளனர்.
மேலும் 150க்கும் மேற்பட்ட தாதியர்கள் தொழிலை விட்டு வெளிநாடு சென்றுள்ளனர்.
தற்பொழுது நாட்டில் 2400 தாதியர் சேவைக்கான வெற்றிடங்கள் நிலவி வருவதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் சாமிக கமகே தெரிவித்துள்ளார்.
Loading...