நாட்டில் தற்பொழுது நிலவி வரும் அதிக வெப்பநிலையுடனான காலநிலை காரணமாக உளவியல் நோய்கள் உக்கிரமடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் நிபுணத்து உளவியல் மருத்துவர் ரூமி ரூபன் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடுமையான வெப்பத்துடனான காலநிலை காரணமாக உளவியல் நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமன்றி ஏனையவர்களும் கூடுதல் அளவில் நீர் அருந்த வேண்டுமென அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கடுமையான வெப்பத்துடனான காலநிலையினால் அதிக கோபம் மற்றும் ஆக்ரோசமான மன அழுத்த வெளிப்பாடுகளை அவதானிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
உளவியல் நோய்கள்
சுற்றாடலின் வெப்பநிலை ஒரு பாகை செல்சியஸினால் உயரும் போது உளவியல் நோய்கள் 2.2 வீதத்தினால் உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீர், இளநீர், பழப்பானங்கள் உள்ளிட்டவற்றை அதிகளவில் அருந்த வேண்டுமென வைத்தியர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
எனினும், இனிப்பு மென்பானங்களை அதிகளவில் அருந்த வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.