சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி மற்றும் சுதாகாரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் அதிமுக செயலாளரான சசிகலாவுக்கு மட்டும் சிறையில் பாதுகாப்பு இல்லை என்றும், அவரை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
சசிகலா எந்த சிறையில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யவேண்டியது நீதிமன்றமே. எந்த தனி நபரும் தீர்மானிக்க முடியாது. சிறை மாற்றத்திற்கு கர்நாடக அரசு சம்மதிக்கும் பட்சத்தில், சிறப்பு நீதிமன்றமே இதை முடிவு செய்யும். சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டால் உச்ச நீதிமன்றம் செல்லவேண்டி இருக்கும்.
சிறையில் பாதுகாப்பை காரணங்காட்டி வேறு சிறை மாற்றத்திற்கு சசிகலா கோரினால், இந்த சிறையைவிட நவீன பாதுகாப்புள்ள சிறை திகார் சிறை அதற்கு மாறலாமே என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால், உளவுத்துறையின் அறிக்கைப்படி, பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா உள்ளிட்ட இளவரசி மற்றும் சுதாகரனுக்கோ எந்த வித ஆபத்தும் இல்லை என தெரிவித்துள்ளது.
அவ்வாறு இருக்கையில் தமிழக சிறைக்கு மாற்றக் கோருவது, அங்கு சகல வசதியுடன் இருக்கலாம் என்று தானே அர்த்தம். ஏனென்றால் அங்கு நடப்பது அவர்களின் ஆட்சிதான் என்று கர்நாடக அரசு வாதிட்டால் அதை நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ளும் சூழலும் உருவாகலாம் என்கிறது சிறைத்துறை வட்டாரம்.