இந்த திரில்லர் படத்தில் சோனியா அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். படத்தில் கதாநாயகன் இல்லை என்பது ஒரு ஹைலைட்டான விஷயம். இதுதவிர இன்னொரு தென்னிந்திய சினிமா பிரபலம் இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க இருக்கிறார். அது யாரென்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ் என்கிறார் இயக்குனர் ஷிஜின்லால்.
கதை, திரைக்கதை, வசனத்தை சிபின் ஷா என்பவர் எழுதியுள்ளார். வழக்கமாக தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் நாம் பார்க்கும் ஹாரர் படங்களை போல இல்லாமல், ஹாலிவுட் பாணியில் மிரட்டலான ஹாரர் படமாக இது உருவாக இருக்கிறது. மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் தனது நல்லாசியுடன் இந்தப் படத்தை துவக்கி வைத்துள்ளார்.
இந்தப் படத்தின் பூஜை இன்று ஏவி.எம்.ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் படத்தின் நாயகி சோனியா அகர்வால், நடிகர் ஜே.கே.ரித்தீஷ் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டனர். ஹாலிவுட்டில் இருந்து வி.எப்.எக்ஸ் மற்றும் படத்தொகுப்பு கலைஞர்கள் டீம் இந்தப்படத்தில் பணியாற்ற இருக்கின்றனர்.
படத்திற்கு சுரேஷ் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் ஆனந்தகுட்டனின் சீடர் ஆவார். ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம் என இருமொழிப்படமாக உருவாகும் இந்தப் படம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட இருக்கிறது.