Loading...
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்படவிருந்த 03 விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
மழையுடன் கூடிய காலநிலையே இதற்குக் காரணம் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Loading...
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான மூன்று விமானங்கள் இவ்வாறு திருப்பிவிடப்பட்டதாக அந்நிறுவனத்தின் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த விமானங்கள் சென்னை, இந்தியா மற்றும் மாலத்தீவுகளில் இருந்து இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...