அமீரின் உதவி இயக்குனர்களில் மிக முக்கியமானவர் சசிகுமார். அவர் ஒருவழியாக நடிகர்,இயக்குனர் என்று கோலோச்சிக்கொண்டு இருக்கார். அவரைப்போலவே அமீரின் இன்னொரு உதவி இயக்குனர் முத்து கோபால்.
அமீரை விட்டு சசிகுமார் போகும்போது சுப்ரமணியபுரம் கதைய சொல்லி, நல்லா இருக்கான்னு கேட்டு போனாராம். ஆனால், முத்து கோபால், விருட்டுன்னு வந்து, படம் பண்றேன்னு சொல்லிட்டு போய்ட்டாராம்.
அதுக்கப்புறம் கொஞ்சநாள் முத்துவை அமீர் வட்டாரத்தில் காணலயாம். திடீர்ன்னு ஒருநாள் வந்து அமீரை சந்திச்ச முத்து,’படம் முக்கால்வாசி முடிஞ்சிட்டு. நீங்க ஒரு ரோலில் நடிச்சிட்டு, அப்படியே மிச்ச படத்தை பணம் போட்டு முடிச்சு தாங்கன்னு’ சொல்லி இருக்கார்.
படத்தை அமீர் பார்த்திருக்கார். மிரட்டலா இருந்துச்சாம். திருப்பூர் சாயப்பட்டறை சம்பந்தப்பட்ட படமாம். செமயா இருக்கவும், தானே நடிச்சி, படத்தையும் முடிச்சி தந்து இருக்கார் அமீர்.
ஆனா, ஷூட்டிங் பண்றதுக்குள்ள தொந்தரவுகளும் , மிரட்டல்களுமா இருந்திருக்கு. இரண்டு மாசம் ஷூட்டிங் கூட பண்ண முடியாம சும்மாவே தெருவில சுத்த நேர்ந்ததாம்.
இந்த படத்துக்கு பாலசந்தர் கேம்பஸில் பேசி ,’ அச்சமில்லை அச்சமில்லை’ தலைப்பை வாங்கி அமீர் பேர் வைத்து இருக்கார்.