நடிகை பாவனாவுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை , வரலக்ஷ்மி சொன்ன வெர்பல் தொல்லை போன்றவற்றை கண்டு நடிகை ஸ்னேகா, தன் சமூக வலைத்தளத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
“பெண்களை மதிப்பாய் மரியாதையாய் நடத்திய காலம் போய்விட்டது. என் சக நடிகைகள் பாவனாவுக்கும், வரலட்சுமிக்கும் நடந்த அத்துமீறல்கள் எனக்கு ரொம்ப மன வேதனையை கொடுத்துள்ளது.
அவர்களுக்கு என் சப்போர்ட் எப்போது உண்டு. அவர்கள் தனக்கு நடந்ததை வெளியே சொன்ன தைரியத்தை பாராட்டுறேன்.
தினம் இது போன்ற பாலியல் வன்கொடுமைகள் பெண்களுக்கு எதிரா நடந்துகொண்டு இருக்கிறது. ஆனால் அதை சொல்ல பெண்கள் அஞ்சுவதால், அது வெளியே தெரிவதில்லை. பெண்களையே இந்த சமூகம் இதற்கு காரணம் என்று சொல்லிவிடுமோ என்ற பயம் தான்.
பெண்கள் உடுத்தும் ஆடைகளை வைத்தும், அவர்கள் செல்லும் இடங்களை வைத்தும், பெண்களின் குணங்களை எடை போடுகின்றனர்.
ஆனால், தனக்கு என்ன நடக்குது என்றே தெரியாத பச்சிளம் குழந்தைகளிடம் இது போன்று நடப்பவர்களை , எடை போடும் அவர்கள் அவர்கள் என்ன செய்ய போகிறார்கள்?
தாய் நாடு என்றும் , பெண் தெய்வங்களை வணங்கியும் வாழ்ந்த நாட்டில் இப்போது பெண்கள் மதிப்பாய் மரியாதையாய் நடத்திய காலங்கள் போய்விட்டது என்பது நம் நாட்டுக்கே பெரிய அவமானம்.
இதை மாற்றவேண்டிய கடமை எல்லோருக்கும் உள்ளது. ஒரு அம்மாவா என் மகனுக்கு பெண்களை மதிக்க மரியாதை கொடுக்க கற்றுத்தருவேன் ” என்று ஸ்னேகா அந்த அறிக்கையில் சொல்லி உள்ளார்.