சசிகலாவால் விரட்டியடிக்கப்பட்ட ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர்கள் தற்போது தீபாவின் வீட்டிலேயே இருக்கின்றனராம். இதனால் தீபா குடும்பத்தில் புகைச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். அவருக்கு ஆலோசனை வழங்க 4 ஆஸ்தான ஜோதிடர்களை வைத்திருந்தார்.
ஜெ. உயிருடன் இருந்தவரை போயஸ் கார்டனில் சுதந்திரமாக வலம் வந்த ஜோதிடர்கள் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசி குரூப்பால் போயஸ் கார்டனில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஜெ. ஆதரவு ஜோதிடர்களை விரட்டியத்த சசிகலா தற்போது தனது ஆதரவு ஜோதிடர்களை ஆலோசனைகளுக்காக வைத்துக் கொண்டுள்ளார். தற்போது சசிகலா சிறைக்குப் போய்விட்டதால் வருமானம் போச்சே என்ற வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே சசிகலா விரட்டிவிட்ட ஜெ.வின் ஆஸ்தான ஜோதிடர்கள் தீபா முகாமுக்குள் நுழைந்து விட்டனராம். தீபாவும் இப்போது ஜாதகத்தில் தீவிர நம்பிக்கையோடு இருந்து வருவதாக கூறப்படுகிறது.
தீபாவின் இந்த திடீர் மாற்றத்தால் குடும்பத்தில் புகைச்சல் அதிகரிக்க தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.