- தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜீவா.
- இவர் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் மகனாவார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், சூர்யா, தனுஷ், விஷால், சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலர் தயாரிப்பாளர்களாக மாறி தொடர்ந்து பல படங்களை தயாரித்து வருகின்றனர். இந்த பட்டியலில் தற்போது நடிர் ஜீவாவும் இணைந்துள்ளார்.அதாவது, சூப்பர்குட் ஸ்டுடியோ என்ற பெயரில் பட நிறுவனம் தொடங்கி தயாரிப்பு தொழிலில் ஜீவா இறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜீவா தயாரிக்கும் முதல் படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கவுள்ளதாகவும் இதில் கதாநாயகனாக ஜீவா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், காமெடி ஜானரில் உருவாகவுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளாராம். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜேஷ் – ஜீவா கூட்டணியில் கடந்த 2009-ஆம் ஆண்டு ‘சிவா மனசுல சக்தி’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகர் ஜீவாவின் தந்தை ஆர்.பி.சவுத்ரி சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.