- பிக்சல் 7a ஸ்மார்ட்போன் 6.1 இன்ச் Full HD+ OLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என தகவல்.
- பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ மாடல்களில் டென்சார் G2 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் பிக்சல் 6a மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக உருவாக்கப்பட்டு வருகிறது. புதிய பிக்சல் 7a மாடல் மே 10 ஆம் தேதி நடைபெற இருக்கும் கூகுள் I/O 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், புதிய பிக்சல் 7a பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.
அந்த வரிசையில், இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் பற்றி புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. டிப்ஸ்டர் யோகேஷ் ரார் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி பிக்சல் 7a ஸ்மார்ட்போன் 6.1 இன்ச் Full HD+ OLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ், டென்சார் G2 பிராசஸர் கொண்டிருக்கும் எனறு கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கூகுள் அறிமுகம் செய்த பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ மாடல்களில் டென்சார் G2 பிராசஸர் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க பிக்சல் 7a மாடலில் 64MP பிரைமரி கேமரா வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
பிரைமரி கேமராவுடன் OIS சப்போர்ட், 12MP அல்ட்ரா வைடு லென்ஸ், 10.8MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் 4000 எம்ஏஹெச் பேட்டரி, 20 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் கேமரா, வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை பிக்சல் 7a மாடலில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இவைதவிர இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்படலாம்.
முன்னதாக வெளியான தகவல்களின் படி பிக்சல் 7a மாடல்- கிரே, வைட் மற்றும் புளூ என்று மூன்றுவித நிறங்களில் வெளியாகும் என்றும் இவை சார்கோல், ஸ்னோ மற்றும் சீ என்று அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. விலையை பொருத்ததவரை பிக்சல் 7a மாடல் 499 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 40 ஆயிரத்து 900 என்று துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.